சர்வகட்சி பிரதிநிதிகள் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்
சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழுவினர் நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக விரைவில் அங்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.
அரசியல்வாதிகள், புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள சிவிலியன்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட மிகுந்த ஆவலாக உள்ளனர். ஒவ்வொரு கட்சியினரும் தனித்தனியான விஜயங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் நிவாரணக் கிராமங்களில் அரசியல் தலையீடுகள் ஏற்படும் சாத்தியக்கூறு உண்டு. இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து கட்சிகள் சார்பாகவும் சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழுவினரை அங்கே அழைத்து செல்ல தீர்மானித்துள்ளோம்.
அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் கட்சி கூட்டமைப்புக்கு பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி இரண்டு தடவைகள் அழைப்பு விடுத்திருந்த போதும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர். வடக்கில் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளை பலப்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் அவர்கள் நிச்சயமாக அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவார்களென எதிர்பார்க்கிறோம்.
புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகள் மூலம் தமிழர்கள் என்றாலே புலிகள் புலிகளெல்லாம் தமிழர்கள் என்ற எண்ணப்பாட்டை பலர் மனதில் விதைத்துவிட்டார்கள்.
இந்த எண்ணப்பாடு மாற வேண்டும். எதிர்மறையான சிந்தனையுடன் எவரும் இந்த நாட்டில் வாழக்கூடாது. ஐக்கிய இலங்கையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply