ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈராக் உப ஜனாதிபதி சந்திப்பு

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோர்தானுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈராக்கின் உப ஜனாதிபதி அடிகப்ட் அல் மஹதியைச் சந்தித்து கலந் துரையாடினார். இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் முக்கியமான பல விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கிணங்க இரு நாடுகளுக்குமிடையிலான ராஜதந்திர உற வுகளை முறையாக மேற்கொள்ளும் வகையில் ஈராக்கில் இலங்கைத் தூதரகத்தை ஆரம்பிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கைத் தேயிலையைக் கொள்வனவு செய்வதில் முன்னணி நாடான ஈராக் தமது தேயிலைக் கொள்வனவை மேலும் கூட்டுவதற்கு கவனம் செலுத்தும் என ஈராக் உப ஜனாதிபதி இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க நிறுவனங்களில் தற்போது தொழில்புரியும் இலங்கையர்களுக்கான சேவைக்கால ஒப்பந்தம் 2010 ஆம் ஆண்டு நிறைவடைகின்றதையடுத்து அவ்வொப்பந்தத்தை மேலும் நீடிப்பதற்கான வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த போது ஈராக்கிய உப ஜனாதிபதி அதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் தற்போது இடம்பெறும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நிர்மாணம் மற்றும் புனருத்தாபன நடவடிக்கைகளுக்கு இலங்கை நிர்மாணப் பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் விடயத்திலும் இரு தலைவர்களுக்குமிடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply