வன்னியிலிருந்து வெளியேறிய மக்கள் தொற்று நோய்களால் பாதிப்பு
வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து சென்று முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதீயா நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் சிரங்கு, சின்னமுத்து ஆகிய தொற்று நோய்களுக்கு உள்ளாகி வருவதாகவும், இவர்களில் நான்கு பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யாழ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி இவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாகவும், இந்த நலன்புரி நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 63 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வன்னியில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மண்டைதீவு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் பொலிஸாரால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நலன்புரி நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply