பிரபாகரனின் உடலம் அடையாளம் காணப்பட்டது : இராணுவத் தளபதி
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது சடலம் மருத்துவ ரீதியாகவும் உறுதிப் படுத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன. பிரபாகரனின் உடலம் தேசிய தொலைக்காட்சியில் காட்டப்பட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மரபணு பரிசோதனையான டி.என்.ஏ. பரிசோதனையிலும் அது பிரபாகரனுடைய சடலம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிரபாகரன் அறிமுகப்படுத்திய அவரது தமிழீழ அடையாள அட்டையும் பீ நெகரிவ் குருதி மாதிரி பொறிக்கப்பட்ட புலிகளின் முதலாவது இலக்கத்தகடும் கூடவே கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கணக்காக இறந்த புலிகளின் சடலங்களை அடையாளம் காண்பதில் படையினருக்கு காலதாமதம் எடுத்தது. இந்த இடைவெளியில் புலிகளின் இணையங்கள் கன கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டன.
“சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஆனால், எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும்“எனத் புலிகளின் ஊடகங்கள் தம்மால் `நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டன.`
கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு என்பது புலிகளின் ஊடகங்கள் விடயத்தில் எட்டு மணித்தியாளங்கள் கூட தாக்கு பிடிக்க முடிவதில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply