இரண்டாவது கொலை முயற்சியிலும் உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் துணை அதிபர்

ஆப்கானிஸ்தானில் 2000-ம் ஆண்டு துவக்கத்தில் தலிபான்கள் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கி பலரை சிறைபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் ராணுவ தளபதி அப்துல் ரஷித் டோஸ்ட்டும். சுமார் 2 ஆயிரம் தலிபான்களை கொன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், ரஷித் டோஸ்ட்டும் இதை மறுத்து வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுடன் முதன்முறையாக துணை அதிபர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற டோஸ்ட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபராக பதவியேற்றார்.

சில ஆண்டுகள் துருக்கி நாட்டில் வாழ்ந்துவந்த அப்துல் ரஷித் டோஸ்ட்டும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காபுல் நகர விமான நிலையத்தின் அருகே இவரை கொல்ல நடந்த தற்கொலப்படை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில், ஜாவ்ஸான் மாகாணத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை அதிபர் டோஸ்ட்டும் வந்த வாகனத்தின்மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பியதாகவும் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply