பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபருக்கு பிணை
பொரளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த டிபெண்டர் வாகனத்தின் சாரதி நவிந்து ரத்னாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கின் சந்தேக நபர்களுக்கெதிராக இலங்கை தண்டனை சட்டத்தின் 298வது பிரிவின் கீழ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்த நீதவான் அன்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அதில் ஏழு பேர், 5 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply