அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு
போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” வைபவம் நாளை ஏப்ரல் 03ஆம் திகதி
இடம்பெறவுள்ளது.
அதன் ஆரம்ப வைபவம் நாளை மு.ப.08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சகல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.
அத்தோடு மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இவ் வைபவத்தில் பங்குகொள்ளவுள்ளனர்.
ஏப்ரல் 03ஆம் திகதி மு.ப.08.30 முதல் 08.34 வரை அரச சேவையாளர்களும் பொதுமக்களும் சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மு.ப.08.30 முதல் 08.32 வரை சிங்கள மொழியிலும் 08.32 முதல் 08.34 வரை தமிழ் மொழியிலும் உறுதிமொழி அளிக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களும் தமது பாடசாலைகளிலிருந்தவாறே சித்திரை மாத உறுதிமொழியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். அதற்கமைய மு.ப.08.34 முதல் 08.36 வரை சிங்கள மொழியிலும் மு.ப.08.36 முதல் 08.38 வரை தமிழ் மொழியிலும் பாடசாலை மாணவர்கள் சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சௌபாக்கியமிக்க இலங்கையை
கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில்
இடம்பெறவுள்ள இந்த தேசிய பணியை மேலும் வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு இந்த
வைபவத்தில் எவ்வித பேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களையும் கலந்துகொள்ளுமாறு
அழைப்பு விடுக்கப்படுகின்றது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply