விடுதலைப் புலிகள் வான் மார்க்கமாக வன்னிக்கு ஆயுதக் கடத்தல்: ஜேன்ஸ் சஞ்சிகை

விடுதலைப் புலிகள் வான் மார்க்கமாக ஆயுதங்களை வன்னிக்கு எடுத்துச் சென்றிருப்பதாக வாராந்த பாதுகாப்புச் சஞ்சிகையான ஜேன்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
ஆட்லறி ஆயுதங்கள் உட்பட்ட ஆயுதங்களை ஒரு தடவையாவது விடுதலைப் புலிகள் வான் மார்க்கமாக வன்னிக்கு எடுத்துச் சென்றிருப்பதாக அந்தச் சஞ்சிகை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இரண்டு விமான ஓடுதளங்களை அமைத்துள்ளமை செய்மதி மூலம் கண்டறியப்பட்டிருப்பதாகவும், மத்திய அல்லது தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஆயுதங்கள் வான்மார்க்கமாக வன்னிக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்க வேண்டுமெனவும் ஜேன்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு விமான ஓடுதளங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது செய்மதிப் படங்களில் தெளிவில்லை. விமானம்; மூலம் ஆயுதங்களை எடுத்துச் செல்லுமளவுக்கு விடுதலைப் புலிகள் அபிவிருத்தி அடைந்துள்ளனர்” என அந்தச் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் மோதல்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தை இழந்ததுடன், வடக்கையும் அவர்கள் இழந்து வருகின்றனர். எனினும், ஆயுத விநியோகங்களுக்கே விடுதலைப் புலிகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்மார்க்கமான ஆயுத கடத்தல்கள் விடுதலைப் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் தற்பொழுது வான்வழியாக ஆயுதங்களைக் கடத்துகின்றனர்” என ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் வான் மார்க்கமாக ஆயுதங்களைக் கடத்துவது சாத்தியமற்றது என விமானப்படைப் பேச்சாளர் ஜானக நாணயகார கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply