மன்னார் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தி : அமைச்சர் கபீர் ஹசிம்

மன்னார் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.
இது வரையில் 2 எரிவாயு படிகங்கள் மற்றும் கனிய வள படிகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு படிகத்தின் மூலம் பெறப்படும் எரிவாயுவின் மூலம் சுமார் 300 மெகாவோலட் வலுவை கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை 2000 வருட காலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இவற்றின் மூலம் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பயன்கிட்டும் என்றும் கூறினார். இதில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில் அரசாங்கத்திற்கும் முதலீட்டாளர்களுக்கு இடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு முன்னெடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் சமீபத்தில் இடம்பெற்ற பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சிக்கான வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply