இந்தியாவின் செயற்கைகோள் தகர்ப்பு சோதனை : ‘நாசா’ விமர்சனத்தை அமெரிக்கா நிராகரித்தது.

இந்தியா, ஏவுகணை மூலம் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை நடத்தியதை அமெரிக்காவின் ‘நாசா’ விமர்சனம் செய்தது. இச்சோதனையால், 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இதனால் ஆபத்து என்றும் கூறியது.

ஆனால், இந்த விமர்சனத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் பல்லடினோ கூறியதாவது:-

விண்வெளி குப்பை பிரச்சினை, அமெரிக்காவுக்கு கவலைக்குரிய பிரச்சினைதான். அதுபற்றிய இந்திய அரசின் விளக்கத்தையும் பார்த்தோம். இந்தியாவுடன் நட்புறவு உள்ளது. விண்வெளி பாதுகாப்பை உறுதி செய்ய இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply