யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இளைஞர்களிடம் மோசடி

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் குறித்த நபர், வழிகாட்டல் நிறுவனம் ஊடாக இளைஞர்களுக்கு , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த நிறுவனத்திடம் பல லட்சம் ரூபாய் பணத்தைச் செலுத்தி வெளிநாட்டு கல்வி வாய்ப்புக் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அந்த முறைப்பாடுகளின் பிரகாரம், நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்படி சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) முற்படுத்தப்பட்டபோது, சந்தேகநபர் வெளிநாட்டு கல்வி வாய்ப்பையும் அதற்கான நுழைவு விசாவை பெற்றுத்தருவதாகவும் முறைப்பாட்டாளரிடம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்றுள்ளார்.

எனினும் சில மாதங்களாகியும் வெளிநாட்டுக் கல்விக்கான அனுமதியையும் நுழைவு விசாவையும் பெற்றுக்கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply