முஸ்லிம் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு போதாது : ஹேஷா விதானகே

முஸ்லிம் மக்­க­ளுக்கு சேவை செய்­ய­வி­ருக்கும் ஒரே அமைச்சு முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சாகும். அந்த அமைச்­சுக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருக்கும் நிதி போது­மா­ன­தாக இல்லை. இது தொடர்­பாக பிர­தமர் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பினர் ஹேஷா விதா­னகே தெரிவித்துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இந்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்­டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு, பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சு மற்றும் மலை­யக புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு, உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்;
நாட்டில் இருக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கு சேவை செய்­ய­வி­ருக்கும் ஒரே அமைச்சு முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சாகும். வேறு எந்த அமைச்சினால் முஸ்­லிம்­க­ளுக்கு தனிப்­பட்ட ரீதியில் சேவை செய்ய முடி­யாது. அமைச்சர் ஹலீம், முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏதா­வது வேலைத்­திட்­டத்தை செய்­ய­வேண்டும் என்று முயற்­சிக்­கின்றார். என்­றாலும் இம்­முறை வரவு செலவு திட்­டத்தில் மிகவும் குறை­வா­கவே நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதனால் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யாடி முஸ்லிம் மக்­க­ளுக்கு சேவை செய்­யக்­கூ­டிய ஒரே அமைச்­சாக இருக்கும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்­சுக்கு மேல­திக நிதியை பெற்றுக் கொண்டு அந்த மக்கள் எதிர்­பார்க்கும் தேவை­களை நிறை­வேற்றிக் கொடுக்க முயற்­சிக்க வேண்டும். இல்­லா­விட்டால் அது எமது அர­சாங்­கத்­துக்கே அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தி விடும்.

அத்­துடன் கடந்த 4 வரு­டங்­களில் நான் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் பிர­தே­சத்தில் ஒரு பள்­ளி­வா­ச­லுக்­கேனும் அமைச்­சரால் உதவி செய்ய முடி­யாமல் போயி­ருக்­கின்­றது. அதற்குத் தேவை­யான நிதி இல்­லா­மையே கார­ண­மாகும். மேலும் முஸ்லிம் மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­படும் பேரீச்சம் பழங்­களை விநி­யோ­கிப்­ப­திலும் கடந்த 4 வரு­டங்­களும் முறை­யாக மேற்­கொள்ள முடியாமல் போயிருக்கின்றது. அதனால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குறைபாடுகள் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படாமல் அமைச்சர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply