கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது:நட்ட ஈடு வழங்க உத்தரவு
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் இடம்பெற்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமை ஊடாக பொலிஸார் அந்த ஊழியர்களின் உரிமையை மீறி இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புவனேக அலுவிஹாரே, விஜித மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இவ்வாறு தீர்ப்பளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.
2011ம் ஆண்டு இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமான 15 பேர் இணைந்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு நபருக்கு 250,000 ரூபா நட்ட ஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த 15 மனுதாரர்களுக்கும் 50,000 முதல் 75,000 ரூபா வரை அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட ஊழியர் செமலாப நிதியம் சம்பந்தமான திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply