பெரியார் சிலை உடைப்பிற்கு : ஸ்டாலின் கண்டனம்
புதுக்கோட்டை – அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலை சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு தி.மு.க கண்டனம் வெளியிட்டுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள், அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருந்தது.
அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது. மிக மோசமான இந்தச் செயலை தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.
பெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை, பொலிஸார் மூலம் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில், அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply