மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் தலைமையில் குழு

மின்சார நெருக்கடிக்கு குறுகிய , இடைக்கால, நீண்டகால அடிப்படைகளில் தீர்வு காண்பதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதி, மின்சாரம் மற்றும் வலுசக்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் பெற்றோலிய வளங்கள், துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டததில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

18.தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 82ஆவது விடயம்)

தற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தீர்வுக்காக மேற்கொள்ளக்கூடிய இடைக்கால மற்றும் நீண்டகால நடைமுறைத் தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்தற்காக கௌரவ பிரதமர் தலைமையில் நிதி மின்சக்தி எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி முதலான அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply