பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கனடாத் தமிழர் உயிரிழப்பு
பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.கனடா பிரஜாவுரிமை பெற்ற செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது 66) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், கடந்த மாதம் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பி வேலணையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி விசுவமடுவிலுள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் சென்று மீண்டும் வீடு திரும்பும் வழியில்,மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்ததால் விபத்துக்குள்ளானார்.
அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அவர் பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply