பிரஞ்சு அதிபர் சர்கோசிக்கு சீனா எச்சரிக்கை தலாய்லாமாவுடன் தொடர்பு கொள்ளக்கூடாது

பிரஞ்சு அதிபர் சர்கோசி அடுத்த மாதம் (டிசம்பர்) திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா வை சந்தித்து பேசுவேன் என்று கூறிஇருந்தார். இப்படி அவர் கூறிய மறுநாளே சீன வெளிநாட்டு அமைச்சரக இணையதளத்தில் அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

வெளிநாட்டு தலைவர்கள், பிரிவினைவாதியான தலாய்லாமாவுடன் எந்தவிதமான உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி உறவு வைத்து கொள்வதை சீன அரசாங்கம் கடுமையாக எதிர்க்கிறது. இதனால் இருதரப்பு உறவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சர்கோசியும், சீன அதிபர் ஹியூ ஜின்டாவோவும் இன்று(சனிக்கிழமை) சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு எச்சரிக்கை வந்துள்ளது பிரஞ்சு அதிகாரிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply