பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியை இதுவரை இராஜினாமா செய்யாத நிலையிலேயே , பதில் பொலிஸ் மா அதிபராக சீ டி விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெறும் வரை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தற்காலிகமாகச் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply