மதூஸின் மனு மீதான வழக்கின் தீர்ப்பு நாளை
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஸ் அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு நாளை (02) அறிவிக்கப்படவுள்ளது.
தன்னை இலங்கைக்கு நாடுகடத்த வேண்டாம் எனத் தெரிவித்து மாகந்துரே மதூஸ் டுபாய் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பில் விசாரணை செய்த அந்நாட்டு நீதிமன்றம் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 02 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply