குடியேறிகள் வந்த படகு துருக்கி கடலில் கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக துருக்கியை கடந்து இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், 16 குடியேறிகளுடன் வந்த ரப்பர் படகு துருக்கி நாட்டின் பலிகேசிர் மாகாணம், அயவலிக் மாவட்டத்துக்குட்பட்ட கடல் பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரை உயிருடன் மீட்ட துருக்கி கடலோர காவல் படையினர் காணாமல் போன 4 பேரை தேடி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply