பிரிட்டனில் அபாயகரமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி நபருக்கு 6 ஆண்டு சிறை
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்கரென் தயாள்(47) என்பவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை மிதமிஞ்சிய குடிபோதையில் தனது மெர்செடிஸ் பென்ஸ் காரை தயாள் ஓட்டி வந்தார்.
வடமேற்கு லண்டன் சாலையில் மணிக்கு 30 மைல் வேகத்துக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 76 மைல் வேகத்தில் தயாள்காரை ஓட்டிவந்த சொகுசு கார், சாலையோரத்தில் நின்றிருந்த வாடகை காரின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வாடகை காரின் டிரைவரான அன்வர் அலி(55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயங்களுடன் இருந்த தயாளை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் அளவுக்கதிகமான மதுவை அருந்தி மிதமிஞ்சிய போதையில் காரை ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, லண்டனில் உள்ள உட் கிரீன் கிரவுன் கோர்ட்டில் அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தரப்பு வக்கீல் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து வாதாடினார். இதன் அடிப்படையில் அவர் குற்றவாளி என கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விதிப்பது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜஸ்கரென் தயாளுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply