மாகந்துர மதூஷ் விசாரணைகளின் பின்னர் CID தலைமையகத்திற்கு
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
UL 226 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply