நீர்கொழும்பு அசம்பாவிதம் : சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு

நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் சேதமடைந்த பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பலகத்துறை ஆகிய பிரதேசங்களில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த பிரதேசங்களின் நிலைமைகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய குழப்ப நிலையை அடுத்து நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply