ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாட்டின் அதி உயர் விருது

“விஷ்வ கீர்த்தி ஸ்ரீதிரீசிங்கள தீஷ்வர” என்ற அதி உயர்விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கப்பட்டது. பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து எமது இலங்கை ஒரே நாடு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் துணையுடன் வெற்றியை ஈட்டித் தந்தமைக்காக கண்டி அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் இந்த விருதை வழங்கின.

இதே போன்று நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு பக்கபலமாக நின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பானவர் போன் றோருக்கு நன்றி தெரிவிக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.

தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலஸ்கதேவ பண்டார அங்கு வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதிக்குரிய கெளரவ பட்டத்தை ஆனமடுவாவே தம்மசித்தி தேரர் சபா மண்டபத்தில் வாசித்தார். பின்னர் ஜனாதிபதிக்குரிய பாராட்டுப் பத்திரமாகிய “விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீ சிங்களராதீஸ்வர” என்ற பட்டம் வெள்ளிப் பேழையினுள் இடப்பட்டு இரு மகாநாயக்கர்களினாலும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் முப்படைகளின் தளபதிகள் உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இதே போன்ற பட்டங்களை மகா நாயக்கர்கள் வழங்கினர். தியவதன நிலமே இவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி கெளரவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply