ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சி: கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் தகவல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய இராணுவ லெப்டினன் ஒருவர் புலிகளுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு விடு தலைப்புலிகளின் தாக்குதல்களுடன் குறித்த இராணுவ லெப்டினட்னுக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இராணுவ சிப்பாய் போன்று உடையணிந்த தற்கொலைக் குண்டுதாரிகளை இராணுவ லெப்டினன்ட் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வன்னியில் கைது செய்யப்பட்ட சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply