தெரிவுக்குழு விசாரணையை ஊடகங்களுக்கு வழங்குவதை நிறுத்த முடியாது: அமைச்சர் ஜயம்பதி

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுக்க முடியாத அதிகாரிகளின் அக்கறையின்மையை சாட்சிகளின் தகவல்கள் மூலம் வெளிப்படுத்துவதானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என அத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணையை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் பார்வையிடச் செய்வது ஒரு வாய்ப்பாக மட்டுமன்றி எமக்கு ஒரு சவாலாகவும் உள்ளது. ஏனெனில் இதற்கு முன் இவ்வாறு இடம்பெறவில்லை. இது ஒரு நீண்டகால தேவையாகும்.

இனிமேல் வரும் ஒவ்வொரு பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையும் ஊடகங்களும் மக்களும் பார்க்கும் வகையில் தொலைக்காட்சிகளில் ஒளிரபரப்பப்படவேண்டும். எதையும் அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. அத்துடன் தகவல் அறியும் சட்டமும் அதையே கூறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

தெரிவுக் குழு முன்னிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் போது அதனை ஊடகங்களுக்கு விடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply