பொலன்னறுவையில் எதிர்ப்பு பேரணி!

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொலன்னறுவை பௌத்த பிக்குமார் ஒன்றிணைந்து, நேற்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 2,000 க்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் பற்றிய புகார்களை ஏற்க போலீஸார் நடவடிக்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று போலீஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

காலை 8 முதல் மாலை 4 மணி வரை செயல்படும் இந்த புகார் பதிவு அலுவலகத்தில், இந்த மூவர் பற்றிய புகார்களை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வரும் 12ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply