இந்தியா ஆயுதம் தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு செய்தோம்: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய வேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  “பாரிய விளைவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கும் அல்லது விற்பனை செய்யும் நிலையில் தாம் இல்லையென இந்தியா கூறிவிட்டது. தொடர்பாடல் சாதனைங்களைக்கூட வழங்கமுடியாது என அவர்கள் கூறிவிட்டனர்” என்று இராணுவத் தளபதி கூறினார்.

இதனாலேயே, பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் உதவியை நாடவேண்டியேற்பட்டதாக இந்திய செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த ஆயுதங்களிலும் குறிப்பிட்டளவு ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியதுடன், ரஷ்யா, உக்ரேன் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் குறிப்பிட்டளவு ஆயுதங்களே தமக்குக் கிடைத்ததுடன், அவை மிகவும் விலையுயர்ந்தவை என்பது தெரியவந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே எமக்கு மாற்றுவழியிருக்கவில்லை. சீனாவிடமே கனரக ஆயுதங்களை நாங்கள் வாங்கினோம்” என்றார் சரத் பொன்சேகா.“இந்த ஆயுதங்கள் ரஷ்யாவின் ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானவை. எமக்கு மாற்றுவழியிருக்கவில்லை” என அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply