வடக்கில் விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதாக அறிவிக்கப்பட்ட 3 மாத காலத்தினுள் வட இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் முன்னர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த வன்னிப் பிரதேசத்தை அண்மித்துள்ள யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பத்து வருடங்களுக்கும் அதிகமான காலத்தின் பின்னர் இந்த உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபை, வவுனியா நகரசபை உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான இந்தத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் அனுஷா பல்பிட்ட தெரிவித்திருக்கின்றார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர், அந்தப் பகுதியில் ஜனநாயக செயற்பாடுகளை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கையே இந்தத் தேர்தலாகும் என்று உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்  கூறியிருக்கின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply