பொசன் பண்டிகையை விமரிசையாக கொண்டாட அரச அணுசரனை : பிரதமர்
இம்முறை பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று(05) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
அநுராதபுரத்தைக் கேந்திரமாகக் கொண்டு கொண்டாடப்படும் பொசன் பண்டிகை நிகழ்வுகளில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பௌத்த மக்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பதாகவும் அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொசன் பண்டிகையையொட்டி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் உள்ளிட்ட பதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களென்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply