சீன பொருட்கள் மீது மேலும் ரூ.20 லட்சம் கோடி வரி: டிரம்ப் மிரட்டல்

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, சீனா உடனான பேச்சுவார்த்தை சுவாரஸ்யமாக உள்ளதாகவும், அடுத்து என்ன நடக்கும் என பொறுமையுடன் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்) அளவிற்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அது சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா தொடர்ச்சியாக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவருவது உலக பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply