பொலிஸ் அல்லது இராணுவத்தைத் தவிர வேறெங்கும் சரணடைய வேண்டாம்

வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் மற்றைய பகுதிகளில் இதுவரை புலிகளுடன் அல்லது வேறேதும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களைத் தவிர வேறெங்கும் சரணடைய வேண்டாம் என்று பொலிஸ் திணைக் களம் நேற்று (மே. 25) வேண்டு கோள் விடுத்தது.

பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு அவ்வாறு சரணடையும் நபர்களை எந்தவித பாதிப்புக்களுமின்றி ஒழுங்கான முறையில் கவனிக்கும் படியும் அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட சிலர் பொலிஸ் மற்றும் இராணுவத்தை தவிர்ந்த வேறு அமைப்புக்கள் ஊடாக சரணடைந்து வருவதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதென்றும் இதனையடுத்தே இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தகவல் தெரிவித்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, இராணுவ முகாமிற்கோ தெரியப்படுத்துமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply