பயங்கரவாத தடை சட்டம், அவசரகால சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்: நிமல் சிறிபால டி சில்வா

புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் பயங்கரவாதத் தடைச் சட்டமும், அவசர காலச் சட்டமும் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதிச்சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிப் பயங்கரவாதம் இப்போது ஒழிக்கப்பட்டி ருக்கிறது என்றாலும் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களைத் தேடி கைது செய்து சட்டத்தின் முன்கொண்டு வரவேண்டும். பயங்கரவாத செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய குண்டுகள், தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் என்பவற்றைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும் மிக வும் அவசியம். அதனால் தற்போதைய சூழ் நிலையில் இவ்விருசட்டங்களும் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் இவ்விரு சட்டங்களை யும் நீக்குமாறு கோரியுள்ளார். பயங்கரவா தத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவ தற்காக அவர் விரும்புகிறார். அதற்கு ஒரு போதும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாது. நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தத்தை முன்னெடுத்தோம். இந்த யுத்தத்தில் புலிப் பயங்கரவாதிகளே தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. இடம்பெயர்ந்துள்ள மக்கள் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply