ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப்பற்றுள்ள அனைவரின் கட்சி: ஜனாதிபதி

முப்பது வருட காலம் தலைவிரித்தாடிய பயங்கரவாதப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப் பற்றுள்ள அனைவ ரினது கட்சியாக மாறியுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு உறுப்பினர்களுக் கான கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:- படையினர் மீட்டுத் தந்த நாட்டை அபிவிருத்தி செய்யும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரதான பொறுப்புள்ளது. ஆகவே அர்ப்பணிப்புடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுத்த பெருமை எமது கட்சியையே சாரும் எனக் கூறினார்.

மேற்படி கூட்டத்தில் ஜனாதிபதியையும் படை வீரர்களையும் கெளரவிப்பது தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இரண்டு யோசனைகளும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் இன்னும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவையும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை சுதந்திரக் கட்சியின் உபதலைவராக நியமிப்பதற்கு முன்மொழியப்பட்ட யோசனையும் எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின்போது கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வேலைத் திட்டங்கள் குறித்து ஆராயுமுகமாக கட்சியின் 19வது தேசிய சம்மேளன மாநாட்டை எதிர்வரும் 12ம் திகதி நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply