கிழக்கு மாகாண முதலமைச்சர் கன்னி வரவு-செலவுத்திட்டத்தை முன்வைக்கிறார்

கிழக்கு மாகாண முதலமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாணசபையின் கன்னி வரவு-செலவுத்திட்டத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமை முன்வைக்கவுள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தை அரசாங்கப் படைகள் மீட்ட பின்னர் அங்கு பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராகவிருந்த வரதராஜப்பெருமாள் 1980ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையில் முன்வைத்த வரவு-செலவுத்திட்டத்தின் பின்னர் சிவநேசதுரை சந்திரகாந்தனே பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கான வரவு-செலவுத்திட்டத்தை முன்வைக்கவுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றங்கள் மற்றும் அபிவிருத்திகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளபோதும் போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லையென சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், கையிலிருக்கும் நிதிக்கு ஏற்ப செலவீனங்களைக் குறைத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply