அதிகாலையில் எழுப்புவதற்கே அமைச்சரவைக் கூட்டத்தை 7.30 இற்கு மாற்றினேன் : ஜனாதிபதி
வாழ்க்கையில் சாதிப்பவர்களின் பிரதான பண்பு அதிகாலையில் எழும்புவதாகும் எனவும், அதிகாலையில் எழும்புவதை வலியுறுத்தும் வகையிலேயே ஒவ்வொரு வாரமும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை தான் காலை 7.30 மணிக்கு மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அமைச்சரவைக் கூட்டத்தை இவ்வாறு மாற்றிய போது சில அமைச்சர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும், சிலர் தாமதமாகியே வருகை தருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply