அரச மருத்துவசாலையில் மருந்து தட்டுப்பாடு இல்லை, போலிப் பிரச்சாரத்துக்கு நடவடிக்கை : ராஜித
அரச வைத்தியசாலைகள் சிலவற்றில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக ஊடகங்களின் மூலம் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருபவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மருந்துக்களுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லையென்றும், அரச வைத்தியசாலைகளில் எந்த மருந்துகளுக்கும் பற்றாக்குறை இல்லையெனவும் மருந்துப் பொருட்கள் விநியோகப் பிரிவின் தலைவர் டொக்டர் சுதர்ஷன அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சாரத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இந்திக அநுருத்த ஹேரத் எம்.பி நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர்இதனைக் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply