ஏ.கே. 47 துப்பாக்கி ஏந்திய போராளிகள் சுட்டுக்கொலை : இஸ்ரேல் ராணுவம் அதிரடி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசாமுனை பகுதியில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், காசாமுனை பகுதியில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு, தங்கள் நாட்டை நோக்கி வந்தனர் எனக்கூறி பாலஸ்தீன போராளிகள் சிலரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்று விட்டது.
இதையொட்டி நேற்று இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “காசாவில் இருந்து இஸ்ரேலை நெருங்கிக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை நாங்கள் அடையாளம் கண்டோம். அவர்கள் கைகளில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் அணி வகுத்து வந்தனர். அதுமட்டுமின்றி கையெறிகுண்டு லாஞ்சர்கள் மற்றும் கையெறி குண்டுகளும் வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் இஸ்ரேலுக்குள் நுழைந்ததும் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply