வெளிநாட்டு தூதுவர்களாக 13 பேர் தெரிவு

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் 52 தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களில் பணியாற்றுவதற்கு உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள அல்லது நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் ஏற்புடைமைத் தன்மையை ஆராய்வதற்கான பாராளுமன்ற உயர் பதவிகள் குழு செயற்படுகின்றது.

இந்த குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக பரிந்துரை செய்யப்பட்ட பதின்மூன்று நபர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்களில், ஒன்பது பேர் இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த தொழில்முறை இராஜதந்திரிகளாவர்:

நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் –  ஏ.எஸ். கான்,

குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் – யு.எல். முஹம்மத் ஜவுஹர்,

கொரியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் – கலாநிதி. ஏ.எஸ்.யு. மென்டிஸ்

ஜோர்தானிற்கான இலங்கைத் தூதுவர் – எஸ். ஷானிகா திஸ்ஸாநாயக்க,

வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர்- டப்ளியு.ஜி.எஸ். பிரசன்ன,

நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் – ஹிமாலி அருணாதிலக்க, ,

கியூபாவிற்கான இலங்கைத் தூதுவர் – லக்ஷித ரத்நாயக்க,

எத்தியோப்பியாவிற்கான இலங்கைத் தூதுவர் – பி.ஆர்.எஸ். சுகீஸ்வர குணரத்ன,

லெபனானிற்கான இலங்கைத் தூதுவர் –  டி.பி.சி.டப்ளியு. கருணாரத்ன

தொழில்வாண்மை ரீதியில் 4 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக – ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜே.சி. வெலிஅமுன

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக (ஓய்வுபெற்ற) முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் கபில ஜயம்பதி,

மாலைதீவிற்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் மேலதிக அளவையாளர் நாயகம் நிமால் கருணாரத்ன

கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக சர்வதேச வர்த்தக ஆலோசகரும், வர்த்தகருமான கித்சிரி அத்துலத்முதலி.

இந்த நியமனங்களுடன் சேர்த்து, வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தலைமை தாங்கும் தொழில்முறை இராஜதந்திரிகளின் விகிதாசாரமானது 2019ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் 37% இலிருந்து 54% ஆக உயர்வடைந்துள்ளது. இந்த வருடத்தில் நியமிக்கப்பட்டுள்ள 27 தூதரகங்களின் தலைவர்களில், 23 பேர் இலங்கை வெளிநாட்டுச் சேவையை சேர்ந்தவர்களாவர் என்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply