ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் மன்னிப்பு கேட்டார் : டிரம்ப்
வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் ராணுவ கூட்டுப்பயிற்சியை தொடங்கி நடத்தி வருகின்றன. இதனை கண்டிக்கும் வகையில் வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிரவைத்தது.
இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார். இதனால் வடகொரியா-அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
3 பக்கங்களை கொண்ட அழகான கடிதம் கிம் ஜாங் அன்னிடம் இருந்து எனக்கு வந்தது. அந்த கடிதத்தில் அவர் அபத்தமான மற்றும் அதிக செலவுமிக்க கூட்டுப்பயிற்சி குறித்து புகார்களை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்காக மன்னிப்பு கோரினார். அதே சமயம் கூட்டுப்பயிற்சி எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போது ஏவுகணை சோதனைகளும் நிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அணுஆயுதம் குறித்த பேச்சுவார்த்தைக்காக என்னை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply