கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு அழைப்பு

தற்போது வெளிநாடுகளில் வசித்து வரும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் உடனடியாக நாடு திரும்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடிப்படை ரீதியலான அரசியல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜெயானந்தமூர்த்தி, எஸ்.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்ப வேண்டிய காலம் உருவாகியுள்ளதென அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு வீச்சில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply