வெலே சுதா, பொட்ட நவ்பர், கஞ்சிப்பான இம்ரான் மூவரும் ஒரே சிறைச்சாலைக்கு

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை மற்றும் தும்பறை சிறைச்சாலைகளில் இருக்கும் வெலே சுதா, பொட்ட நவ்பர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை அண்மையில் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கஞ்சிப்பான இம்ரானும் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த மூவரும் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மூவரும் கடும் பாதுகாப்பின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக சிறைச்சாலை புலனாய்வு தரப்பினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய சிறைக்கைதிகள் பலர் எதிர்வரும் தினங்களில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply