அவசரகாலச் சட்டம் நீக்கம் : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விளக்கம்

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்தன தெரிவித்தார்.

பியகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அவசரகாலச் சட்டம் கண்டி தலதாமாளிகை பெரஹரவை முன்னிட்டு நீடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதனால்தான் அவசரகாலச் சட்டத்தை நாம் ஒரு மாத காலத்திற்கு நீடித்தோம். ஆனால் தற்பொழுது நாட்டின் பாதுகாப்பு நிலமையை கவனத்தில் கொள்ளும் போது நிலமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கவேண்டிய தேவை இல்லை இதற்கு மேலதிகமாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதனால் சுற்றுலாப்பயணிகள் வருவதிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்
இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் நாம் கலந்துரையாடினோம். அவர்கள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது உசிதமானது என தெரிவித்தனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply