சூடானில் பழங்குடியினர் மோதல்: 37 பேர் படுகொலை

சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா ஆகிய பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த புதன்கிழமையில் இருந்து மேலும் அதிகரித்தது.

போர்ட் சூடான் பகுதியில் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநில ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply