பொட்டம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்தி` உண்மையில்லை : இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா

புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அதன் இரண்டாம் நிலை பொறுப்பாளர் கபில் அம்மான் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்திகளில்` எந்த உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

பொட்டு, கபில் மாத்திரமல்ல பிரபாகரனையும் உயிருடன் பிடிக்கும் தேவை இருந்த போதிலும் கடுமையான யுத்தத்தின் போது ஒருவரை கொன்று விட்டு மற்றுமொருவரை கைதுசெய்வதென்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ள பொன்சேக்கா, இவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால் இன்னும் பல முக்கிய தகவல்களை கண்டறிந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

பொட்டாம்மானின் சடலம் அடையாளம் காணப்படாததன் காரணமாகவே இவ்வாறான `செய்திகள்` பரவி வருகின்றன. பொட்டம்மானின் சடலத்தை அடையாளம் காண படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதியாக நந்திக்கடல் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றன இதில் கொல்லப்பட்ட புலிகளின் சுமார் 100 சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. இவற்றில் பல சடலங்கள் நீரில் மூழ்க்கியுள்ளன. அவற்றை மீட்க்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டு, சடலங்கள் மீட்க்கப்பட்ட போதிலும் அவை அடையாளம் காணமுடியாத அளவில் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply