பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 13.6 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.
ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன.
இந்த அனைத்து ஆயுத கொடுக்கல் வாங்கல்களும் பூர்த்தியடைந்துள்ளனவா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவ தளவாட விற்பனைக்கு அரசாங்கங்கள் அனுமதியளித்த போதிலும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனவா என்பது குறித்து சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.மோசமான மனித உரிமை நிலைமைகள் காணப்படும் நாடுகளுக்கோ அல்லது உள்ளக பிரச்சினைகள் காணப்படும் நாடுகளுக்கோ ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களை விநியோகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு தொழினுட்ப உதவிகளை வழங்கிய பாகிஸ்தான் வான்படை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் வான் படையினர் வழங்கிய தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளிற்கு பாகிஸ்தானிர்கான இலங்கை தூதுவர் எயார் மார்ஷல் ஜயலத் வீரகெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.முக்கியமாக சீன எப் – 7 ஜெட், சி- 130 விமானங்களிற்கான தொழில் நுட்ப உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கியமைக்காக அவர் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply