அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்ய அரசாங்கம் திட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடெல் ஒரு மருத்துவ தாதியாவார். அன்டன் பலசிங்கம் லண்டனில் இருந்த போது, அவரைச் சந்தித்த அடெல் பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிறுவர் போராளிகளை இணைத்தமை, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈடுபட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால், அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அடெல் பாலசிங்கம், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக செயற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply