மின்னணு வாக்கு பதிவுக்கு இந்தியாவின் உதவியை கேட்போம்: இலங்கை தேர்தல் கமிஷன் தலைவர்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. இதில் 35 பேர் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் இலங்கை தேர்தல் கமிஷன் தலைவர் மகிந்த தேசபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் 1½ கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்கு பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ராணுவ தளபதி சகாவேந்திர சில்வாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அடுத்து நடைபெறும் மாகாண தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மாற்றி மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பரீட்சார்த்த முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக இந்தியாவின் உதவி கேட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply