புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசினார் வடக்கு ஆளுநர்

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசியுள்ளார். வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம் அவற்றிற்கு புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பாக இதன்போது விளக்கமளித்த ஆளுநர், இந்த கூட்டுறவு வங்கியின் ஊடாக வடமாகாண பாமர மக்களின் அபிவிருத்திக்கு எவ்வாறு புலம்பெயர் மக்கள் உதவ முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply