தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
இதில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் துவக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தனர். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் பின்தங்கினர்.
காலை 9.30 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 5312 வாக்குகளும், புகழேந்தி 3265 வாக்குகளும் பெற்றிருந்தனர். முத்தமிழ்செல்வன் 2000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 6300 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன 4700 வாக்குகளும் பெற்றிருந்தனர். ரெட்டியார்பட்டி நாராயணன் 1600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply